வெசாக் பௌர்ணமி சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 34 பேர் கைது.

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் செய்யப்பட்டதாக மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.பெரேரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கபப்டடுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக எதிர்வரும் 12 திகதி வரை அட்டன் மற்றும் நுவரெலியா நீதி மன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொட்டகலை, தலவாக்களை, ஹட்டன், குடாகம, கினிகத்தேனை நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 16 ம் திகதி முதல் 20 திகதி வரை வெசாக்தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத சாராயம் தொடர்பாக 19 பேரும், தென்னங்கள்,தொடர்பாக 07 பேரும்,பியர் தொடர்பாக ஐந்து பேரும் கேளர கஞ்சா தொடர்பாக மூன்று பேரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட  மது பானங்கள் மற்றும் சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்