உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை

உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளி வாசலில் விசேட தொழுகையும் இரங்கல் நிகழ்வும் இன்று மதியம் 12.15 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சலீம் ஹாஜ்சியார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த உறவுகளுக்காக விசேட தொழுகை இடம்பெற்றதுடன் அவர்கள் நினைவாக இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.

இதில் மதத்தலைவர்கள், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நகரசபைத் தலைவர், நகரசபை உபதலைவர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக நலன்புரிச் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது இரங்கல் உரைகளை வழங்கினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்