ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் நேற்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு இராணுவ அதிகாரிகளால் மரியாதை செலுத்தப்பட்டதுடன் பிரதம அதிதிகளினால் நினைவுத் தூபிக்கு மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வ மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன்

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, , சர்வ மத தலைவர்கள். இராணுவ அதிகாரிகள் ,ராணுவ வீரர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வு முதல்முறையாக இம்முறை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்