வவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்

வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியினால் ஆலயம் மற்றும் 06 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை வவுனியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது.

இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

06 வீடுகளின் கூரைகளும், ஶ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தினதும் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், கூரைக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

இங்கு காணப்பட்ட நிரந்தர வீடுகளே பகுதியளவும் சேதமைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் ஓமந்தைப் பகுதியில் ஓரு வீடு சேதமடைந்துள்ளது.

மேலும் ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வீட்டின் கூரை பகுதி வீழ்ந்தமையால் இருவர் காயமடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்