வற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றவர்கள் கைக்குண்டுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்துக்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது எனவும், இதன் பின்னர் பொலிஸார் அந்த வானில் கைக்குண்டை வைத்துவிட்டு, வானில் வந்தவர்கள் கைக்குண்டு வைத்திருந்தனர் எனச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் எனவும் கைதானவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

திட்டமிட்ட வகையில் பொலிஸார் குண்டை வைத்துவிட்டு தமது உறவுகளைக் கைதுசெய்துள்ளனர் எனவும், இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்தச் சம்பவத்து டன் தொடர்புடைய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்களினது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்