வவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன? – ஸ்ரீதரன் கேள்வி

வுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அஜந்தனுக்கு இந்த அரசாங்கம் என்ன நட்டஈட்டை வழங்கப்போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அஜந்தன் தற்போது குற்றமிழைக்கவில்லை என்பது பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நிரூபனமாகியது. அதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர் அனுபவித்த சித்திரவதைகளுக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது? அவருக்கு என்ன நிவாரணம் வழங்கப்போகிறது? இவ்வாறு எத்தனை தமிழ் யுவதிகள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காணாமலாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்கீழ் பல கைதிகள் விடுதலைப்பெற்றனர். ஆனால் அதில் ஒரு தமிழ் அரசியல் கைதிகள்கூட இடம்பெறவில்லை. ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்டால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்