வாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி

பூநகரி வாடியடி பொது சந்தை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது.
பராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் முயற்சியால் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற இருக்கும் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 20.05.2019ம் நாள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிரதேச சபையின் ஞானிமடம் வட்டார உறுப்பினர் திரு.வி.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திரு.அ.ஐயம்பிள்ளை பச்சிலைப்பள்ளி தவிசாளர் திரு.சு.சுரேன், பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன் பூநகரி பிரதேச செயலாளர் திரு.கிருஸ்னேந்திரன், உப தவிசாளர் திரு.சி.சிறிரஞ்சன், உறுப்பினர்களான இ. செல்வராசா , பூபாலசிங்கம்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் திரு.மு.கஜன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.யோ.தனராஜ், முழங்காவில் அமைப்பாளர் திரு.த.குவேந்திரன், பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரி, வர்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள்,
பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
21 Attachments

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்