சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்

சமாதானத்தில் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சி இராணுவத்தினர் இன்று(22) மாபெரும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை எட்டு மணியளவில் கிளிநொச்சி ஏ9 பிராதான வீதியில் கரடி போக்குச் சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை இப் ஊல்வலம் இடம்பெற்றது.

கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர். கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய உட்பட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுப்பாக ஏ9 பிரதான வீதி வழியாக டிப்போச் சந்தி நோக்கி சென்றிருந்தனர். இதன் போது வீதியின இருமருங்கிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்