இறந்தபின் பாலூற்றி என்ன பயன்! திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்

சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் திருமணம். மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.

தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டே, தனது அடுத்த இயக்கத்துக்கான கதையைத் தயார்செய்து வருகிறார் இயக்குநர் சேரன். மேலும், திருமணம் படம் தொடர்பாக தொடர்ச்சியாக வரும் பாராட்டுகளுக்கு பதிலளித்தும் வருகிறார்.

நேற்று (மே 21), படம் வெளியாகி திரையரங்குக்கு போவதற்குள், வேறு படம் போட்டுவிடுகிறார்கள். இளைஞர்களைக் கவர மீண்டும் வெளியிட வேண்டும் என்று சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குநர் சேரன், நீங்களெல்லாம் முதலில் பார்க்க வரவில்லை. ஆட்கள் வரவில்லை என தியேட்டர்காரர்கள் எடுத்துவிட்டனர்.

இப்போது வெளியிடலாம் என்றால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பைரசியில் படம் வந்துவிட்டது. அதில் படம் பார்த்து எல்லாரும் கொண்டாடுகிறார்கள், சிறந்த படம் என. இறந்தபின் பாலூற்றி என்ன பயன்? இப்போது ஒவ்வொருவரும் நல்ல படம் என சொல்லும்போது, சந்தோஷத்தைவிட கோபம்தான் வருகிறது என பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்