நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.”

– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை. நாம் எல்லோரும் ஒன்றுகூடி நாளை ஒரு முடிவை எடுப்போம்” என்று சபாநாயகர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்