சற்று முன்னர் பொலிஸார் – மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் – பொலிஸ் அதிகாரி பலி

தென்னிலங்கையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை அக்குரஸ்ஸ – உருமுத்தையில் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்ய செல்லும் போது, எதிர் தரப்பினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்கள் ஊருமுத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய அக்குரஸ்ஸ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்