கண்டியில் இன்று பரவிய வதந்தியால் பதற்றமடைந்த பெற்றோர்

கண்டி நகரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் பரவிய வதந்தி காரணமாக பெருமளவிலான பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக நகரில் உள்ள பிரதான பாடசாலைகளில் கூடியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதியம் 12 மணியளவில் இந்த வதந்தி பரவியுள்ளது. இதனையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.

எனினும் எந்த சம்பவமும் நடக்கவில்லை. கண்டி நகரில் உள்ள சில பாடசாலைகளில் போதுமான பாதுகாப்பு இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்