கந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு

வவுனியா கந்தபுரம் யங்கன்குளம் பகுதியில் நேற்று (21.05.2019) மாலை கைக்குண்டோன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட யங்கன்குளம் பகுதியிலுள்ள தோட்டக்காணியோன்றினை காணி உரிமையாளர் மூலம் நேற்று (21.05.2019) மாலை பேக்கோ இயந்திரம் மூலம் துப்பிரவு செய்துள்ளார்.

பேக்கோ மூலம் அகற்றப்பட்ட கழிவுகளை ஒர் இடத்தில் ஒதுக்கி அதனை தீயிட்ட சந்தர்ப்பத்தில் கழிவுகளில் இருந்து ஒர் கைக்குண்டோன்று வெடித்து சிதறியுள்ளது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை

இதனையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்துசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது வெடிக்காத நிலையில் மேலும் ஒர் கைக்குண்டினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர்.

அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டும் மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிக்க செய்யும் பொருட்டும் வவுனியா நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு நேற்று (22.05.2019) சற்று முன் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவ இடத்தில் தற்போது பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டு 82- வகையினை சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்