8ஆம் திகதி முல்லைத்தீவு செல்கிறார் மைத்திரிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளைமேற்கொள்வதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்தப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கமைய அதிரடி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வீட்டுத்திட்டம், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல் ,கிராம சக்தி, சிறுவர் பாதுகாப்பு எனப் பல திட்டங்களை அவர் ஆரம்பித்து வைப்பார்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்