பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கின்றது. ஆட்சியை மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் கைபற்றவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார் இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்கள்.

தொடர்ந்து அவரது வாழ்த்து செய்தியில்;

இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இலங்கையில் மலையக பெருந்தோட்டங்களில் வாழும் 18 மில்லியன் மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களின் ஆட்சி இந்திய பாராத நாட்டில் மீண்டும் உறுவாவது சந்தோசமான விடயமாகும். உங்கள் ஆட்சியில் இந்தியா வளர்சி அடைவது போல் இலங்கையும் இலங்கையில் மலையகமும் உங்கள் வருகையால் வளர்ச்சி அடைகின்றது. அதற்கு நன்றிகள். நாங்களும் இந்திய தொப்புக் கொடி உரவுகள். இந்த உரவுகள் தொடர்ந்து நீடிக்க உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கின்றேன் என்று தனது வாழ்த்து செய்தியில் மேலும் கருத்து தெரிவித்து உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்