யாழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வு

யாழ்ப்பாணம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் அண்மையில் (21) பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் இறுதி உதைபந்தாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் கேடயங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்