காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீச்சம் பழங்கள்…

காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நாட்டப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் தற்போது பேரீச்சம் பழங்கள் காய்த்து குலுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பமாக சூழ்நிலை காரணமாக பேரீச்சம்பழங்கள் காய்த்துள்ளன.

பழங்களாகவும், காய்களாகவும், பூக்களாகவும் பேரீச்ச மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவான பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளன.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் குறித்த மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்