முதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும்! பின்னரே உயிரை கொடுக்க வேண்டும்! ஞானசாரர் கவலை

அவசரப்படாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானதன் பின்னர் இன்று மாலைருக்மல்கம விகாரைக்குச் சென்று வழிபட்ட தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

நாடு எதிர் கொண்டுள்ள அடிப்படைவாத நடவடிக்கைகளைத் தோற்கடிக்க எதிர்காலத்தில் அவசரப்படாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டுக்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து நாம் கூட்டம் போட்டுச் சொன்னோம்.

இறுதியில் நாம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவிட்டது.

எது எப்படிப் போனாலும் எதிர்வரும் நாட்களில் நாம் பொறுமையுடனும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டியுள்ளோம்.

எனக்கு இப்போது கலைப்பு ஏற்பட்டுள்ளது. பல வருடங்கள் நாட்டுக்காக துக்கம் அனுபவித்தேன். நான் சிங்களவர் என்ற வகையிலும் பிக்கு என்ற வகையிலும் கூறவேண்டிய அனைத்தையும் கூறி முடித்துள்ளேன்.

இந்த நாட்டிலுள்ள சகலருக்கும் கூறிக் கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அதுதான், ‘நாட்டுக்காக அனைவருக்கும் உயிரைக் கொடுக்க முடியும். ஆனால், நாடு என்ற ஒன்று அதற்கு எஞ்சியிருக்க வேண்டும்’ எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்