அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன

அதற்கமைய, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது..

வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 19 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 3 பேரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அதேவேளை, இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்