லொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் நகரில் லொறியில் சிக்குண்டு வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது எனக் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியை கடக்க முயற்சித்த குறித்த வயோதிபப் பெண், பொகவந்தலாவப் பகுதியில் இருந்து ஹட்டன், குடாகம பகுதிக்குச் சென்ற லொறியில் சிக்குண்டதில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் லொறிச் சாரதியின் கவனயீனமே எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செலல்லப்பட்டுள்ளது.

லொறியின் சாரதி ஹட்டன் பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சாரதியை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்