இனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு

சமூக வலைத்தளங்களில் இனவாதத்தை தூண்டும் பதிவுகளை பதிவேற்றும் நபர்களை அடையாளம் காண, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு ஆத்திரத்தை தூண்டும் இனவாத பதிவுகளை பதிவேற்றிய பல நபர்களின் பட்டியல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இனவாத கருத்துக்கள சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட சட்டத்தை உருவாக்க உள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்