நிந்தவூரில் கத்திக் குத்து! ஒருவர் பலி

நிந்தவூரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 18ஆம் பிரிவுக்கு உட்பட்ட ஹாஜியார் வீதியில் நேற்று இரவு இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த 26 வயதுடைய முஹம்மது அஜ்மில் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்