மணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு

மணல் கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைக் குழுவொன்று திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல குறிப்பிட்டார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 90 தடவைகள் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அசேல இத்தவெல தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்