இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெள்ளை நிறப்படகு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 15 பேர் தப்பி இந்தியாவின் லட்சதீவுக்கூட்டத்தில் ஒன்றான மினிகோ தீவை நோக்கிச் செல்கின்றனர் என்று வெளியான உளவுத் தகவல்களை அடுத்து இந்தியாவின் கேரள கடலோரப் பகுதி முழு அளவில் உஷார்ப்படுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படை ரோந்து அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும், முக்கிய தகவல் கிடைத்தால் உடன் தெரியப்படுத்தும்படியும் மீனவ அமைப்புகள் மூலம் கேரள மீனவர்கள் கோரப்பட்டுள்ளனர்.

உளவுத் தகவல்களை அடுத்து இந்த உஷார் எச்சரிக்கையை கரையோரப் பாதுகாப்புப் பொலிஸ் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலை அடுத்து கேரளா இலக்கு வைக்கப்படலாம் என்று உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன எனக் கூறப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்