அமைச்சர் றிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும்- ரெலோ அதிரடி முடிவு

( பாறுக் ஷிஹான் )

அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி அத்தோடு நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

றிசாத் பதியுதீன் அவர்கள் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என ரெலோ நேற்று (26)அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் கட்சியின் தலைமைக்குழு கூட்டம் நடந்தது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்