ஜனநாயகக் கட்டமைப்பாக கூட்டமைப்பின் தீர்மானம்!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும் பிரேரணையைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தமை சில சர்ச்சைகளை -குழப்பகரமான பிரதிபலிப்புகளை- தோற்றுவித்திருக்கின்றமை என்பது உண்மையே.

ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டில் பல இடங்களிலும் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து உடனடியாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அவசர காலச் சட்ட விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படாத நிலையில்பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டபோது அதனைத் தமிழ்ப்பிரதிநிதி கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவில்லை. தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டுமல்லர்எவருமே எதிர்க்கவில்லை.

இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் மிக மோசமான பேரழிவுகளை நாடு சந்தித்துஅந்தப் பேரதிர்ச்சியில் மூழ்கியிருந்த அந்தச் சமயத்தில் அந்த நெருக்கடியை விரைந்து கையாளும் அவசர நடவடிக்கையாக நாட்டில் அவசர காலநிலைமையை அரசு பிரகடனப்படுத்தியது. அதை எதிர்க்கக் கூடிய அரசியல் சூழ்நிலை – களநிலைமை – அன்று இருக்கவில்லை.

ஆனால்அன்று அதை வெளிப்படையாகக் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை என்பதற்காக அதனைத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் முதல்வர் சி.வீ.விக்னேஸ்வரன்ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன் போன்றோர் கடுமையாகக் கண்டித்தனர்.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிட்டாத தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்தோர்நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்ட கூட்டமைப்பின் செயற்பாட்டை நேரெதிராக இப்படி விமர்சனம் செய்தமை ஆச்சரியப்படத்தக்கதல்ல.

இந்த மூவரில் சுரேஷ் பிறேமசந்திரனின் கட்சியின் செயலாளர் நாயகம் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்தான். கூட்டமைப்பின் சார்பில் தெரிவானவர்தான். ஆனால் அவரும் கூட முதல் தடவையாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதுபற்றிய அறிவித்தல் சபைக்கு வந்தபோது அதனை எதிர்க்க வில்லை.மற்றைய இருவரின் – நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரின் – கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருந்திருந்தால் அவர்களும் அப்போது அவசரகாலச் சட்ட ஏற்பாடுகளை எதிர்க்காமல் விட்டிருப்பரோ என்னவோ…?

எனினும்இரண்டாவது மாதத்துக்கு அவசர காலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்தபோது அங்கு பிரசன்னமாகியிருந்த எட்டு கூட்டமைப்பு எம்.பிக்களும் அதனை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துப் பேசிய ஜே.வி.பியினர் கூட வாக்களிப்பு நடந்த போது சபையில் இருக்கவில்லை.

முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளுக்கு என்ற பெயரிலேயே – நோக்கத்திலேயே – இந்த அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு நீடிக்கப்படுகின்றது. எடுத்த எடுப்பிலேயே அதன் தீவிர கரங்கள் முஸ்லிம்கள் மீதே உடன் பாய்ந்தன. இன்றைய நிலையில் அது இயல்பான தும்தவிர்க்க முடியாததும்தான். இவ்வாறு அவசரகாலச் சட்டங்களும் ஏனைய நெருக்குவார ஒழுக்க விதிகளும் முஸ்லிம்
கள் மீது தம் கைவரிசையைக் காட்டுகின்றமை குறித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பல மட்டங்களிலும் குரல் எழுப்பி வருகின்றனர். ஜனாதிபதிபிரதமர் உட்பட அரச தலைவர்களைச் சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.

ஆனால்அவர்கள் எவருமே இந்த அவசரகாலச் சட்ட விதிகளுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அரசுத் தரப்பாலும்எதிர்த்தரப்பாலும் கணிசமான முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோரும் இது விடயத்தில் அம்சடக்காக இருந்து கொண்டார்கள்.

கூட்டமைப்பினர் மட்டுமே பகிரங்கமாக வெளிப்பட்டுஇந்த அவசரகாலச் சட்ட நீடிப்பை வெளிப்படையாக எதிர்த்தனர்.  இந்த வாக்களிப்புக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுமாவை சேனாதிராசா தலைமையில் கூடி இது குறித்து ஆராய்ந்தது. அந்தக் கூட்டத்துக்கு பத்து எம்.பிக்களே சமுகம் தந்தனர். சம்பந்தன்சுமந்திரன் வரவில்லை.

இருந்த எம்.பிக்கள் எல்லோரும் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தத்தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்டினதும்ரெலோ வினதும் தலைவர்களான சித்தார்த்தனும்செல்வமும் கூட அவசரகாலச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தையே அங்கு பிரதிபலித்திருக்கின்றனர். தொலைபேசி மூலம் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன்இன்றைய நிலையில் அவசரகாலச் சட்டத்தை எதிர்ப்பதுஇவ்விடயத்தில் அதீத கவனம் செலுத்தும் சர்வ தேசத்துக்கு தவறான சமிக்ஞையைத் தந்து விடலாம். எனவே யோசித்து முடிவு எடுங்கள் என்று தமது கருத்தை மட்டுமே முன்வைத்தார்.

அதை அழுத்தமான முடிவாக முன்வைக்கவில்லை. இதற்கு மேல் இந்த விடயத்தில் கருத்து கூற சுமந்திரன் எம்.பியும் நாட்டில் இருக்கவில்லை.

அந்தப் பின்புலத்தில்தான்கூட்டமைப்பின் எம்.பிக்களின் ஏகோபித்த விருப்பின் அடிப்படையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை எதிர்ப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.  சம்பந்தன்குறிப்பிட்டமை போல அந்தத் தீர்மானத்தின் பெறுபேறு சில சமயம் பாதகமான விளைவுகளை – பெறுபேறுகளைத் தந்துவிடக் கூடும். எனினும் கூட்டமைப்பு இந்த முடிவை – தீர்மானத்தை – வெளிப்படுத்தியமை மூலம் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக மகிழலாம். சம்பந்தன்சுமந்திரன் திணிப்பதுதான் கூட்டமைப்பின் முடிவு என்று விமர்சித்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் விதத்தில் கட்சிக்குள் ஜனநாயகம் தழைத்தோங்குவதை இந்தச் செயற்பாடு காட்டுகின்றது எனக் கூட்டமைப்பினர் தாராளமாக மகிழ முடியும். (காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம் – மே28,2019)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்