யாழ் தொகுதி கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்திகள் ஆரம்பம். முதல் நிகழ்வாக மைதானப்புனரமைப்பு

யாழ் தொகுதி கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்திகள் ஆரம்பம். முதல் நிகழ்வாக மைதானப்புனரமைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் 2019ஆம் ஆண்டு கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாவின் முதல் அபிவிருத்தி திட்டமாக யாழ்ப்பாணம் குருநகர் சென் ஜேம்ஸ் மைதானப் புனரமைப்பு நடவடிக்கைகள் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில்; இடம்பெற்றது.

கம்பரெலிய 200 மில்லியன் திட்டத்தில் குருநகர் சென் ஜேம்ஸ் மைதானப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா. சுதர்சன் அவர்கள், அருட்தந்தையர்கள், விளையாட்டுக் கழகத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்