றிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திலிருந்து நீக்கவும்

அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இவ்வாறான நிலையில்  வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகே இன்று (28.05.2019) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கட்டப்பட்டுள்ளன.

குறித்த பதாதையில் “மதவாதி தேசதுரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்த்திலிருந்து நீக்கவும்”  வன்னி தமிழ் மக்கள்  எழுதப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் ரிசாத்துக்கு எதிராக மக்கள் பாரியளவிலான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்