வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்து பதாதைகளை வீதிகளில் அமைத்துள்ளனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கட்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு என்று பல ஊடகங்களிலும் தெற்கு அரசியல்வாதிகளும் குற்றம் சுமத்திவரும் நிலையில் குறித்த அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கட்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் கூறி வரும் நிலையில்

வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வீதிகளில் பதாதைகளை அமைத்துள்ளனர்

குறித்த பதாதைகளில் “வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே எச்சரிக்கை!
இதற்கு மேலும் பொறுமை இல்லை.. பயங்கரவாதத்திற்கு துனை போன அமைச்சர் என கருதப்படும் ரிசாட்டிற்கு ஆதரவாக செயற்படும் எந்த உறுப்பினரும் எம் கிராமத்தில் நுழைய முடியாது-குட்செட் வீதி இளைஞர்கள், பொதுமக்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை வவுனியாவில் பல பகுதிகளில் அமைச்சர் ரிசாரட் பதியுத்தீன் அவர்கட்கு எதிரான பதாதைகளை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தாம் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களுக்கு எதிராகவே வாக்களிப்போம் என ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்