கண்டியிலும் 6000 பேருக்கு கருத்தடை சத்திர சிகிச்சை

 புதிய குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்.பி.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்து அந்தப் பிரச்சினை கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க.

செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்த எஸ்.பி., பேராதனை வைத்தியசாலையில் பணிபுரிந்து இப்போது மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிராஜ் என்ற வைத்தியரும் இன்னுமொரு பெண் வைத்தியரும் சுமார் 6 ஆயிரம் பெண்களை மலடாக்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இப்படி பேராதனைப் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாட்டைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் எஸ்.பி. கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்