மட்டக்களப்பில் கிளைமோர் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் இணைந்து இன்று (புதன்கிழமை) இந்த குண்டை மீட்டுள்ளனர்.

குறித்த கிளைமோர் குண்டு விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தபட்டதென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்