மோடியின் பதவியேற்பு நிகழ்வு – மைத்திரி இந்தியாவிற்கு பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2ஆவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு பயணமாகியுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) புது டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்தியாவிற்கு பயணமாகியுள்ளார்.

இதன்போது இந்திய பிரமருடன், மத்திய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையும் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய, சர்வதேச அரச தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என 6 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதலிடம் எனும் கொள்கையினடிப்படையில் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை, பங்களாதேஷ், கிர்கிஸ்தான், மொரீசியஸ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்