புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்போம்: திகாம்பரம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து அவருக்கு ஆதரவு வழங்குவோமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை, லோகி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழனி திகாம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எமது மக்களை காலம் காலமாக ஏமாற்றி வந்தவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஏமாற்றுவதற்கு முனைவார்கள்.

ஆகையால் மக்கள்  இவ்விடயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் மாறாக ஏமாறி வாக்களிப்பீர்களாயின் தனி வீட்டுத்திட்டமொன்று இல்லாமல் போய்விடும்.

இதேவேளை எமது நோக்கம் மலையகத்திலுள்ள லயன் வீடுகளை இல்லாதொழித்து கிராமங்களை உருவாக்குவதே ஆகும். மேலும் 50 தனிவீட்டு திட்டம் மிக விரைவில் மலையகத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது.

ஆகையால் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே மலையத்தில் சிறந்த அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்