அகுரஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்தபோதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த மாதம் 22ஆம் திகதி அகுரஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இன்றைய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த சந்தேகநபர் 56 வயதுடைய  போதைப்பொருள் வியாபாரி என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்