வவுனியாவில் தெளஹீத் ஜமாத் பள்ளியை படம்பிடித்த ஊடகவியலாளர் கைது

நேற்று முன்தினம் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தில் இயங்கிவரும் தெளஹீத் ஜமாத் பள்ளியை ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்ததுடன் பள்ளி நிர்வாகிகளிடம் குறித்த பள்ளி பற்றிய தகவல்களை கேட்டறிந்த பின் குறித்த தகவல் இணைய ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த பள்ளிவாசலின் செயலாளரினால் குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அத்துமீறி புகைப்படம் எடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் (31.05.2019) பிற்பகல் 2மணியளவில் ஊடகவியலாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதுடன் ஊடகவியலாளரை விடுவித்த பொலிஸார் மீண்டும் நேற்றைய தினம் இரவு 10மணியளவில் அவரது வீட்டிற்கு சென்று கைது செய்ததுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

நீதிமன்றில் வழக்கை விசாரித்த நீதிபதி ஊடகவியலாளரை பிணையில் விடுவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் குறித்த செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளதுடன் புகைப்படம் எடுத்தமையால் கைது செய்யப்பட்ட இணைய ஊடகவியலாளர் அன்று பிரஷ்னோ அவர்களின் கைதானது ஊடகதுறைக்கு விடுக்கும் அச்சுறுத்தல் எனவும் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்