கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ – 9 வீதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முறுகண்டியை அண்மித்துள்ள செல்வபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தனியார் பஸ் ஒன்று, பாஸ் நிறுத்தும் இடத்தை விடுத்து வேறு இடத்தில் பயணிகளை இறக்கும்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதீயதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில், வேலைசெய்யும் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்