கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இப்தார் விசேட நிகழ்வு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இப்தார் விசேட நிகழ்வு நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு 6 மணியளவில் கிளிநொச்சி நாச்சிக்குடா மக்தப் அல் ஹிக்மாபள்ளிவாசலில் இடம்பெற்றது.

கிளிநாச்சி இராணுவ தலைமைக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படை உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விசேட இக்ப்தார் வழிபாடு இடம்பெற்றது. வருடம் தோறும் இவ்வாறான இப்தார் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்