தலவாக்கலையில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டம் கையளிப்பு

தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 16 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 01.06.2019 அன்று இடம்பெற்றது.

கடந்த காலங்களில் இத்தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் அப்பகுதியில் உள்ள 16 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு தொகுதி வெடிப்புகள் ஏற்பட்டு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக அவ் குடியிருப்பில் வாழ்ந்த மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அமைச்சின் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் கட்சியின் பொது செயலாளர், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, வீடுகளை திறந்து வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்