பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து!

ஆளுநர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எமது ஆதவன் செய்திசேவைக்கு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர் அசாத் சாலி “மேல் மாகாண ஆளுநராக எனது பதவியில் இருந்து விலகுவதற்கான எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை” என கூறினார்.

அத்தோடு என்னைப்பற்றி வெளியாகும் எந்த அறிக்கையும் உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார். “எவரும் என்னை பதவி விலகும்படி கேட்டிருக்கவில்லை. இத்தகைய அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை” என கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், சமீபத்தில் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்