அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் திருகோணமலை – சிவன் கோயிலுக்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழர் ஈடுபட்டுள்ளார்.

திருகோணமலை, திருகடலூர் பிரதேசத்தை சேர்ந்த மீனவர் வில்ராஜா ஜெயவேந்தன் என்ற 51 வயதான நபரே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஹிஸ்புல்லா, அசாத் சாலி பதவி விலக வேண்டும் எனவும், ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்