வருமானம் குறைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் கல்வி கற்கும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தில் இன்று(03) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.இராசநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கனடா கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் தலைவரும் கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளருமான ஏ. சிறிகரன் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்தார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் தூரப்பிரதேசங்களுக்கு சென்று கல்விகற்பதற்கான வாகன வசதிகள் இன்மை தொடர்பில் அமைப்பின் உறுப்பினரும் ஆசிரியருமான ஆ.கமலநாதன் ஊடாக பாடசாலை அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வறுமையான தமிழ் பிரதேசங்களின் கல்வியை அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கில் செயற்படும் குறித்த அமைப்பானது பிரான்ஸில் வசிக்கும் முருகதாஸ் என்பவரின் நிதியுதவியுடன் குறித்த துவிச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் கிராம உத்தியோகத்தர் பி.கிரிசாந்த் அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகராசா அமைப்பின் உதவி பொருளாளர் திருமதி ரிசாந் கவிதா, இணைப்பாளர் கிசாந்த் , நல்லையா, சரண்தாஸ், பிரதி அதிபர் எஸ்.சதீஸ் பாடசாலை அபிவிருத்;திச்சங்க செயலாளர் எம்.கோகுலன் உள்ளிட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்