அவுஸ்ரேலியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வெளிவிவகாகர அமைச்சர் பீட்டர் டடின் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.

குறித்த விஜயத்தின்போது இலங்கையிலுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தையும் பீட்டர் டடின் இன்று பார்வையிடுவாரெனவும் தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நாளைய தினம் நடைபெறவுள்ள ஊடகச் சந்திப்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் அவுஸ்திரேலியாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் குறித்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்