ரணில்- மஹிந்த இரகசிய பேச்சுவார்த்தை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உதவியாளர்கள் எவருமின்றி தனியானதொரு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்தே அதிகம் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படலாமெனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ரணில்- மஹிந்தவின் இந்த சந்திப்பில் அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்