மலையக அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா! – அமைச்சர் பழனி திகாம்பரம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
தற்போது நாங்கள் மலையகத்தில் பெருவாரியான வீட்டுத்திட்டங்களை கட்டிகொடுத்து வருகின்றோம.; ஒரு காலத்தில் எமக்கு அடையாளமே லயம் தான்; விலாசத்தினை கேட்டால் கிலாஸ்கோ தோட்டத்தில் இருக்கிறோம் மேல் கணக்கு நடுகணக்கு ,என்று தான் கூறி வந்தோம். இன்று அந்த நிலை மாறி நமக்கு ஒரு புதிய கிராம அமைச்சு கிடைத்திருக்கிறது.  அந்த கிராமத்திற்கு ஒரு பெயரிட்டு நாங்களும் ஏனைய சமூகங்களை போல வாழக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.சரியாக பயன்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தோட்டத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். .உங்களுக்கு தெரியும் ஐம்பது வருடம் எண்பது வருடம் வாழ்ந்தவர்கள் இரண்டு சிறிய கொங்கிறீட்  மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள.; .இல்லாவிட்டால் மைதானத்தினை சுற்றி வளையடித்துவிட்டு போய்விடுவார்கள். இதுவல்ல வாழ்க்கை நமக்கு வாழ்வதற்கு ஒரு வீடு தேவை அது உள்ளேயே மலசலகூடம் தேவை.  இன்று தோட்டப்புறங்களை எடுத்துக்கொண்டால் 40000 குடும்பத்திற்கு மலசலகூட வசதிகள் இல்லை. இந்த நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்போதுதான் நாங்கள் வந்த பின் இதையெல்லாம் கண்டு பிடித்து செய்துவருகிறோம். இதனை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு உங்களுடைய ஆதரவு தேவை. நாங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கு நிறைய வேலைத்திட்டங்களை செய்து வருகிறோம்.இந்த அரசாங்கம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் 300 மில்லியன் கொடுத்திருக்கிறார்கள். அது இல்லாமல் அமைச்சுக்கு 3600 மில்லியன் ரூபா கொடுத்துள்ளார்கள் இதில் மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு சிறந்த சேவையினை பெற்றக்கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நானுஓயா உடரதல்ல மேல் பிரிவு தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ‘பசும் பொன்’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 24 வீடுகளும் டெஸ்போட் லோவர் டிவிசனில் 14 வீடுகளும், வோல்ட்றீம் தோட்டத்தில் மெராயா பிரிவில் 20 வீடுகளும், கிளாஸ்கோ தோட்டத்தில் 15 வீடுகளும்; கையளிக்கும் நிகழ்வு 02.06.2019 நேற்று அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில்  இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உடரதல்ல தோட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..

அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் நான் வீடுகட்டிக்கொடுத்தால் கட்சிப்பார்த்து வீடுகளை கட்டிக்கொடுப்பதில்லை.மாற்றுக்கட்சிகள் வீடுகளை கட்டிக்கொடுத்தால் கூட நான் வீடுகளை திறப்பதற்கு வருவதில்லை.யார் செய்துகொடுத்தாலும பரவாயில்லை  மக்கள் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரியும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கு அடுத்து பொது தேர்;தல் வருகிறது அதற்கு அடுத்து மாகாண சபை தேர்தல் வருகிறது அடுத்து வருடமே தேர்தல் வருடமாகதான் இருக்கப்போகிறது.

இந்த ஐந்து வருடகாலப்பகுதியில் மலையகத்திற்கு ஒன்று செய்யாத கட்சிகள் அப்போது வந்து போய் கூறி உங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். இந்த ஐந்து வருடத்தில் நாங்கள் என்ன செய்துள்ளோம்? ஐம்பது வருடத்தில் அவர்கள் என்ன செய்துள்ளார்கள்? ஒப்பிட்டு பாரத்தீர்கள் என்றால் நன்கு புலனாகும்.

ஐந்து பத்து வீடுகள் கட்டுவதல்ல நாங்கள் கிராமங்கள் அமைத்து வருகிறோம் இங்கேயும் மீதியுள்ள மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம். எங்களுக்கு ஒரே நாளில் மலையகத்தில் உள்ள அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாது. அதனை படிப்படியாகவே செய்ய வேண்டும்;.
ஒரு காலத்தில் எமக்கு ஒரு தோட்டத்தில் காணி துண்டு கூட கிடைக்காது. ஆனால் இன்று தோட்டங்களில் வீடுகளை கட்டுவதற்கு காணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். அந்த அளவு அரசாங்கம் இன்று எம்மை மதித்து செயப்பட்டு வருகிறது. நமக்கும் சொந்த காணியில் வாழ வேண்டும் என்று இந்த அரசாங்கம் செய்துவருகிறது.

எனவே மக்கள் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் 10000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஜூலை மாதம் முதல் வீடுகளை கட்ட ஆரம்பிப்போம.; அது வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இன்று தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்கு தேவையான தகரங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் கட்சியின் பொது செயலாளர், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்