மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

மும்முனை அரசியல் போரினால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டில் உள்ள பெரும்பான்மை கட்சிகள் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர்.

இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. இதனாலேயே இன்று நாட்டில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன. நாட்டின் புலனாய்வு துறையும் இராணுவமும் சிறப்பாக செயற்பட்டாலும் அரசியல் போட்டி காரணமாகவே அவர்களின் சேவை மழுங்கடிக்கப்பட்டன.

ஆகவே இதற்கு தீர்வுகாணப்படவேண்டும். நாடு சுபீட்சமடைய வேண்டும். அவ்வாறு நடைபெற மூன்று தலைவர்களும் ஒன்று சேர வேண்டும். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதற்காக மூவரும் விட்டுக்கொடுப்புடனும் சமதானத்துடனும் செயற்பட முன்வரவேண்டும்.

இந்த நாட்டிலே வாழ்கின்ற மக்களில் 51 வீதமானவர்கள் பெண்கள். ஆண்;களைவிட பெண்களின் பங்கே நாட்டின் அபிவிருத்தியில் அதிகம். அந்த வகையில் பெண்களுக்;கான அரச நிதி ஓதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்’ எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்