அமைச்சு பதவிகளை துறக்கிறார்கள் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளனர்.

அமைச்சர் ரிசாட், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க வலியுறுத்தி எழுந்த கோரிக்கைகளையடுத்து, இன்று கொழும்பில் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போதே, இந்த முடிவு எட்டப்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி தமது முடிவை அறிவிக்கவுள்ளனர். அனைத்து அமைச்சர்களும் பதவிகளை துறந்து, பின்வரிசையில் அமரவுள்ளனர்.

இதேவேளை, அரசிலிருந்தும் வெளியேறி தமிழ் தேசிய கூட்டமைப்பை போல ஒன்றாக செயற்பட வேண்டுமென்றும் ஒரு பகுதி எம்.பிக்கள் வலியுறுத்தினர். எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்