இந்தியாவின் எட்டு நகரங்களில் அதிக வெப்பம்

உலகில் அதிக வெப்பம் நிலவும் நகரங்களின் பட்டியலிலுள்ள முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் உள்ளடங்கியுள்ளன.
பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் குழுவினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மற்றும் உலகமயமாதல் என்பன காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துவருகின்றது.
கடந்த வருடத்தில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வீசிய அனல்காற்றினால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறித்த அறிக்கையில் முதல் 15 இடங்களை பிடித்துள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கரு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் உத்தர பிரதேஷின் பந்தா, ஹரியாணாவின் நருணால், கோட்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களே குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் அனல்காற்று நீடிக்கும் என்பதுடன் இதனால் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்