யாழ். நகரில் நள்ளிரவில் நடமாடிய நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீதியில் சந்தேகத்திற்கு இடமாக குறித்த நால்வரும் நடமாடுவதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தினால் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் இருவரும் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், விசாரணைகளின் பின்னர், அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்