விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளருக்கு அஞ்சலி நிகழ்வு

மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு. அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது ஒளிப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு. அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசாவும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித் கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்ததோடு, அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்