20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்

இருபதுக்கு இருபது போட்டிகளில் 8000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரரான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வட்சன் (Shane Watson) பதிவாகியுள்ளார்.

சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் சன்ரைசஸ் ஹதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் 57 ஓட்டங்களையும் மனிஷ் பாண்டே இறுதிவரை களத்தில் நின்று 83 ஓட்டங்களையும் பெற்றனர்.சன்ரைசஸ் ஹதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றது.வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் அணி சார்பாக சுரேஷ் ரெய்னா 38 ஓட்டங்களை பெற்றார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷேன் வட்சன் 6 சிக்சர்கள் 9 பவுன்டரிகளுடன் 53 பந்துகளில் 96 ஓட்டங்களை விளாசினார்.இதன்போது, அவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரராக பதிவானார்.

இருபதுக்கு 20 போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த முதல் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 195 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்